மேலும் செய்திகள்
கடையின் ஷட்டரை உடைத்து மொபைல் போன்கள் திருட்டு
23-May-2025
நீலாங்கரை, ஜூன் 14--சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணியில், 'சென்னை மொபைல்ஸ்' ஷோரூம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு, ஊழியர்கள் கடையை மூடி சென்றனர்.நேற்று காலை ஷோரூம் மேலாளர் பிரேம்குமார், 30, கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, நேற்று முன்தின விற்பனை தொகை 1.70 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த ஆறு ஐ - போன்கள், இரண்டு சாம்சங் மொபைல் போன்கள் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
23-May-2025