உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம்  வெளியீடு

சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம்  வெளியீடு

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் தயாரான, 'நில் கவனி நேசி' என்ற விழிப்புணர்வு குறும்படம், திருமுல்லைவாயிலில் நேற்று வெளியிடப்பட்டது. குறும்படத்தை கமிஷனர் சங்கர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில், விபத்து ஏற்படும்போது, செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து 90 நிமிட விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி குறித்தும் அறிவிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்பவர்கள் அக்., 5ம் தேதி வரை, பெயர், முகவரி, மொபைல் போன் எண் மற்றும் சமூக வலைதள முகவரியை gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். சிறந்த விழிப்புணர்வு ரீல்ஸ் தேர்வு செய்யப்பட்டு, ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94458 25100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை