மேலும் செய்திகள்
தீபாவளி போனஸ் தகராறு நண்பரை குத்தியவருக்கு வலை
04-Nov-2024
கொளத்துார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 34. இவர், பெரவள்ளூர் ஜி.கே.எம்., காலனியில் உள்ள ஜே.பி.பேக்கரியில் சிப்ஸ் மாஸ்டராக பணிபுரிகிறார். இரண்டு வாரத்திற்கு முன், இவரது சித்தப்பா ஆரோக்கியதாஸ் என்பவர், இவரை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.இந்த நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில் பேக்கரிக்கு மதுபோதையில் சென்ற ஆரோக்கியதாஸ், ரஞ்சித்குமாரிடம், 1,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் ரஞ்சித்குமாரின் கீழ் உதட்டை, ஆரோக்கியதாஸ் கடித்து துப்பியுள்ளார்.அலறித்துடித்த ரஞ்சித்குமாரையும், வெட்டுப்பட்ட உதட்டையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின்படி, பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கியதாஸை, 43, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
04-Nov-2024