வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது
பெரம்பூர், பெரம்பூரை சேர்ந்தவர் பத்மநாபன், 68; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி, மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 11ம் தேதி இரவு வீட்டின் பிரதான கதவை சாத்தி விட்டு, பத்மநாபன் துாங்கியுள்ளார்.மறுநாள் காலை கண்விழித்தபோது, கதவு திறந்து இருந்ததுடன், வீட்டில் பூஜையறையில் இருந்த வெள்ளிப்பொருட்கள், இரண்டு மொபைல்போன்கள் காணாமல் போயிருந்தன.செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த, பழைய குற்றவாளியாக ஏழுமலை, 33 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்; திருடு போன பொருட்களையும் மீட்டனர்.