உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கப்பூர் விமானம் 9 மணி நேரம் தாமதம்

சிங்கப்பூர் விமானம் 9 மணி நேரம் தாமதம்

சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலை 1:40 மணிக்கு 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் இயக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 11:40 மணிக்கு, சென்னை வந்து சேரும்.இதில், பயணிக்க 175 பயணியர், இரவு 10:00 மணி முதலே சென்னை விமான நிலையம் வந்து காத்திருந்தனர். ஆனால், விமானம் தாமதமாக 12:30 மணிக்கு சென்னை வந்தடைந்தது.இந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், விமானம் சற்று தாமதமாக புறப்படும் எனவும், விமான நிறுவனம் அறிவித்தது.விமானம் புறப்பட தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பயணியர் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள், சமாதானப்படுத்தினர்.பின், விமானத்தில் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு, 9 மணி நேரம் தாமதமாக, காலை 10:31 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ