உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் 

தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் 

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், அலமாதி சாலையில், 'செலிபிரிட்டி பேஷன் லிமிட்' என்ற பெயரில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், 560 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நிர்வாக சிக்கல் காரணமாக, தாம்பரம், மெப்ஸ் பகுதிக்கு, இந்நிறுவனத்தை இடமாற்றம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, கடந்த 7ம் தேதி மாலை தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விருப்பம் உள்ளோர், தாம்பரத்திற்கு வந்து பணியாற்றலாம் என்றும் என நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த 400க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், நேற்று காலை 11:00 மணி முதல் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் மனிதவள நிர்வாகம் மற்றும் ஆவடி மண்டல துணை தாசில்தார் விஜயானந்த் தலைமையில் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில், தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் குழுவினருடன், இன்று காலை பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 10, 2025 17:45

ஆவடியில் இருந்து தாம்பரத்திற்கு 500-600 பெண்கள் தினமும் வேலைக்கு சென்று வருவது கிட்டதட்ட இயலாத காரியம். ஒருவகையில் இது கட்டாய வேலையிழப்பு என்றே கொள்ளவேண்டும். அரசு இதில் தலையிட்டு நிர்வாகத்தை நிர்பந்தித்தால் அவர்கள் வேறு வழியின்றி நிறுவனத்தை மூடிவிட்டு வேறு பெயரில் வேறு இடத்தில் தொழில் துவங்குவதை தவிர்க்க முடியாது. கட்சி அரசியல் தலையீடு தமிழகத்திற்கு அவப்பெயரையே ஏற்படுத்தும், மேலும் தொழில் முனைவோர் வேறு மாநிலம் நோக்கி செல்ல வழிவகுக்கும்.


nagendhiran
ஜூன் 10, 2025 06:25

வர வர நம்ம ஆளுங்களுக்கு எதற்கு போராடனும்னு விவஸ்தையே இல்லாம போய்டுச்சி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை