உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடையை மீறி மயோனைஸ் பயன்பாடு : ஆறு கடைகளுக்கு ரூ.3,000 அபராதம்

தடையை மீறி மயோனைஸ் பயன்பாடு : ஆறு கடைகளுக்கு ரூ.3,000 அபராதம்

சென்னை, சென்னையில் உள்ள மூன்று அசைவ உணவகங்களில் சமீபத்தில், 'ஷவர்மா', பீப் பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் உட்கொண்ட, 40க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பாதிப்பிற்கான காரணம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முட்டையில் இருந்து வெண் கருவை எடுத்து, வேக வைக்காமல் தயாரிக்கப்படும் மயோனைஸ்தான், உடல் நல பாதிப்புக்கு காரணம் என, கண்டறியப்பட்டது.உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில், மயோனைஸ் பயன்பாட்டுக்கு, தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.தடையை மீறி மயோனைஸ் பயன்பாடு உள்ளதா என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 10 நாட்களாக உணவகங்கள், சாலையோர பிரட் ஆம்லேட் கடைகளிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பொறுப்பில் உள்ள சந்திரபோஸ் கூறியதாவது:கடந்த 10 நாட்களில், 140 கடைகளில் ஆய்வு செய்துள்ளோம். தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்திய ஆறு கடைகளுக்கு தலா, 3,000 ரூபாய் அபராதத்துடன், நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.உணவு மாதிரி எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து, உணவகங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ