உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

புதுவண்ணாரப்பேட்டைபுதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து, நேற்று காலை அங்கன்வாடி மையத்தை ஊழியர் திறக்க வந்தார். அப்போது, சமையல் அறையில் இருந்து, 6 அடி நீளமுள்ள பாம்பு வந்துள்ளது. இதைப் பார்த்து பதறிய ஊழியர், அலறியடித்தப்படி வெளியே ஓடினார். தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர், 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !