சில வரி செய்திகள்
தொழிலதிபரை மிரட்டிய இருவர் கைது
திருவொற்றியூரை சேர்ந்தவர் டில்லிபாபு, 40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தை விற்றுத் தருவதாக, சூர்யா என்பவர் அறிமுகமானார். சூர்யாவின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தொடர்பை துண்டித்துள்ளார். சில தினங்களுக்கு முன், மொபைல்போனில் டில்லிபாபுவிடம் பேசிய சூர்யா, 'ஐந்து லட்ச ரூபாய் பணம் வேண்டும். தர மறுத்தால் உன் பிள்ளைகளை கடத்தி விடுவேன்' என மிரட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன், ஐந்து பேருடன் சென்று டில்லிபாபுவை கத்திமுனையில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவின் கூட்டாளிக ள், தமிழரசன், 28, தங்கவேலு 35, என்ற இருவரை கைது செய்தனர். சூர்யா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். பெண்ணுடன் வாழ்ந்து ஏமாற்றியவர் கைது
கொளத்துாரைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்தார். கடந்த 2021ல், முகமது ரபீக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, மாதவரத்தில் வசித்து வந்தார். அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த முகமது ரபீக், தனியாக இருந்தபோது எடுத்த படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். புழல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, முகமது ரபீக், 29, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.