தாயை பாட்டிலால் தாக்கிய மகன் கைது
பிராட்வே:பிராட்வேயைச் சேர்ந்தவர் தேவிகா, 45; துாய்மை பணியாளர். இவர், தன் மகன் பாலுவுடன் வசித்து வருகிறார். பாலு அடிக்கடி குடித்து விட்டு, தேவிகாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று, பிராட்வே 2வது கடற்கரை சாலையில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த பாலு, தாய் தேவிகாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். தேவிகா தர மறுக்கவே, பாலு தகாத வார்த்தையால் பேசி, மது பாட்டிலால் தாக்கி மிரட்டினார். இதனால் காயமடைந்த தேவிகா, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, பிராட்வே, மூர் தெரு பிளாட்பாரத்தைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பாலுவை, 30, கைது செய்தனர்.