உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை மார்ச் 14ம் தேதி காலை 9. 30 மணிக்கு கூட உள்ளது. அன்றைய தினம், 2025- 26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ya1gpa9w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
பிப் 18, 2025 17:41

வெத்து முழக்கங்கள் கவர்னரை மற்றும் மத்திய வசை பாடுடதல் வேறு என்ன இருக்கும்.


KavikumarRam
பிப் 18, 2025 14:22

மத்திய அரசிடம் படஜெட் பற்றிய உங்கள் கூற்றுப்படி தமிழ்நாடு பட்ஜட்டில் கோயமுத்தூருக்குத்தான் அதிக நிதி ஒதுக்கணும். அரியலூர், தருமபுரி போன்ற ஏழை மாவட்டத்துக்கு அஞ்சு பைசா ஒதுக்கக்கூடாது.


KavikumarRam
பிப் 18, 2025 14:00

கண்டிப்பாக கேவலமான கேனத்தனமான பட்ஜட்டா தான் இருக்கும்.


guna
பிப் 18, 2025 12:51

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்திற்கும் சரி சமமாக பட்ஜெட் ஒதுக்கவேண்டும். கூட குறைய இருக்கக்கூடாது...


Anand
பிப் 18, 2025 12:39

எதற்காக சபை கூட்டினோம் என்பதை ஒதுக்கி தள்ளிவிட்டு அவிங்களுக்குள்ளேயே ஆளாளுக்கு புகழாரம் சூட்டி புளங்காகிதம் அடைவார்கள்...... ரொம்ப கன்றாவியா இருக்கும்.


Bharathanban Vs
பிப் 18, 2025 12:23

அனைத்து மாவட்ட பேரும் இருக்குமா? கோவை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தான் அதிக வரி கட்டுது ... அதனால் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்க படுமா?


ஆரூர் ரங்
பிப் 18, 2025 11:41

பட்ஜெட்டில் இடஒதுக்கீடுக் கொள்கை நியாயமாக கடைபிடிக்கப் படவேண்டும். சமூகநீதிப்படி பின்தங்கிய 5 மாவட்டங்களுக்கு 69 சதவீதமும் மற்ற முன்னேறிய மாவட்டங்களுக்கு 31 சதவீதமும் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ( ஆளும் குடும்பம் தமக்கு ஒதுக்கிக்கொண்டது போக மீதி)


Laddoo
பிப் 18, 2025 11:39

இப்போதைய பட்ஜெட் தர்விஷ் குடும்பத்துக்கு போக மிச்சம் தான் சோற்றாலடித்த பிண்டங்களுக்கு


karthik
பிப் 18, 2025 11:30

அனைத்து மாவட்டங்களின் பெயரும் பட்ஜெட்டில் வரணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை