மேலும் செய்திகள்
பயிற்சி அலுவலகங்களை மூட அமெரிக்க அதிபர் உத்தரவு
23-Jan-2025
சென்னை :'வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை வாங்கியவர்கள், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நடத்தப்படும்' என, வாரியம் அறிவித்துள்ளது.வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வீட்டுவசதி வாரிய திட்டங்களில், 1961 முதல் மக்கள் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடுகளை பெறுகின்றனர். இதில் தவணை செலுத்தி முடித்தவர்களுக்கு, விற்பனை பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள், தங்களுக்கான நில உடைமையை உறுதி செய்வதற்கு, பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது அவசியம். அரசின் உத்தரவுப்படி, வீடு, மனை ஒதுக்கீட்டாளர்கள், பட்டா பெறுவற்கு, வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திட்டங்களின் ஒதுக்கீட்டாளர்கள், பட்டா பெற சிறப்பு முகாம்கள் அந்தந்த கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நடத்தப்படும்.கோட்ட அலுவலக அதிகாரிகள் வருவாய் துறையுடன் இணைந்து, மக்கள் வந்து செல்வதற்கான நாளில், இந்த முகாம்கள் நடத்த வேண்டும். முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விபரங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து, ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரின் வீட்டிற்கும் அனுப்ப வேண்டும் என, கோட்ட அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை அளித்து பட்டா பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Jan-2025