உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக அசாமுக்கு சிறப்பு ரயில்

பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக அசாமுக்கு சிறப்பு ரயில்

சென்னை, கோடை விடுமுறையொட்டி, பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக, அசாம் மாநிலம், நியூ தின்சுகியாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:★ நியூ தின்சுகியாவில் இருந்து, இன்று முதல் ஜூன் 26 வரை, வியாழக்கிழமைதோறும் மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் காலை 9:00 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சென்றடையும்★ எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, வரும் 20 முதல் ஜூன் 29 வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாளில் மதியம் 1:50 மணிக்கு நியூ தின்சுகியா சென்றடையும் இந்த சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக செல்லும். இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி