| ADDED : நவ 19, 2025 04:18 AM
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, ஆந்திரா மாநிலம், 'சத்யா சாய் பி' நிலையத்துக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூரில் இருந்து வரும் 23ம் தேதி இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:10 மணிக்கு சத்யா சாய் பி நிலையத்துக்கு சென்றடையும் சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வரும் 23ம் தேதி மாலை 6:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு, சத்யா சாய் பி நிலையம் செல்லும் சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.