விளையாட்டு போட்டிகள்
பள்ளிக்கல்வித் துறையின் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், புனித தோமையர்மலை பகுதியில் உள்ள மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன், இடமிருந்து: பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கணபதி, செங்கல்பட்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இன்பராணி, கற்பகம், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஸ்டீபன் சேவியர், நிர்வாகிகள் வெற்றிவேந்தன், சுபஸ்ரீ சீனிவாசன். இடம்: ஆயுதப்படை வளாகம், புனித தோமையர்மலை.