உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / - மாவட்ட கிளப் கேரம் போட்டி பெண்களில் கீர்த்தனா சாம்பியன்

- மாவட்ட கிளப் கேரம் போட்டி பெண்களில் கீர்த்தனா சாம்பியன்

சென்னை, சென்னை மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியின் ஒற்றையர் பெண்கள் பிரிவில், சென்னை சார்பில் தனித்துப் போட்டியிட்ட கீர்த்தனா, அந்த பிரிவின் 'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினார். சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் பி.ராதாகிருஷ்ணன் கேரம் அகாடமி இணைந்து, சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியை, சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் இம்மாதம் 4ம் தேதி நடத்தின. இதில், சென்னை மாவட்ட கிளப்பை சேர்ந்த 600க்கு அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இந்தப் போட்டி பதக்கம் பெற்றவர், பதக்கம் பெறாதவர் என இரண்டு பிரிவாக நாக் - அவுட் முறையில் நடந்தது. அந்த வகையில் ஆண்களில் பதக்கம் பெற்றவர், ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் சென்னை, டி.ஏ.ஆர்.சி., கிளப்பின் அசோக்குமார், எம்.ஐ.சி.ஏ., கிளப்பின் தினேஷ் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய அசோக்குமார் 25 - 9, 25 - 0 என்ற புள்ளிக்கணக்கில் தினேஷை வீழ்த்தினார். அடுத்து நடந்த பெண்களில் பதக்கம் பெற்றவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், தனித்து விளையாடிய கீர்த்தனா, சி.என்.சி.சி.சி., கிளப்பின் பர்காத் நிஷாவுடன் மோதினார். இதில் கீர்த்தனா 22 - 8, 25 - 0 என்ற புள்ளிக்கணக்கில் நிஷாவை வீழ்த்தி, அந்த பிரிவின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். தொடர்ந்து நடந்த நான் - மெடலிஸ்ட் பிரிவு ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், பி.எஸ்.சி.ஏ., கிளப் அணியின் மணிகண்டன், 2 - 0 என்ற கணக்கில் சி.சி.சி., கேரம் கிளப் வீரர் ஸ்ரீனிவாசனை தோற்கடித்து வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி