மேலும் செய்திகள்
கோ கோ, கேரம்: சாதித்த பள்ளிகள்
08-Aug-2025
ராயபுரம், ஹிந்துஸ்தான் பல்கலையில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி அணி, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது. சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், கடந்த 30, 31ம் தேதிகளில் நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து 32 பள்ளி அணிகள் பங்கேற்றன. 'லீக்' அடிப்படையில் நடந்த முதல் அரையிறுதியில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி அணி, கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில், 22 - 25, 25 - 20, 15 - 9 என்ற செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தி, ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் இரண்டாவது அரை இறுதியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணியும், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், 25 - 16, 25 - 18 என்ற செட் கணக்கில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு சென்றது. இறுதி போட்டியில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியும், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணியும் களமிறங்கின. இதில் 18 - 25, 25 - 17, 15 - 7 என்ற செட் கணக்கில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி அணி, எதிரணியை வீழ்த்தி 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர், துணை முதல்வர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
08-Aug-2025