உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்கள் ஹாக்கி காஞ்சி அணிக்கு நாளை தேர்வு

பெண்கள் ஹாக்கி காஞ்சி அணிக்கு நாளை தேர்வு

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, மே 5 முதல் 8 வரை நடக்கிறது.இதில் காஞ்சிபுரம், சென்னை, புதுக்கோட்டை உட்பட, பல மாவட்ட அணிகள் போட்டியிடுகின்றன.இதில் பங்கேற்க, காஞ்சிபுரம் அணியின் தேர்வு முகாம், கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளி வளாகத்தில், நாளை காலை 6:30 மணிக்கு நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் வீராங்கனையர் 2009, ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். விபரங்களுக்கு 87545 84519 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளாம் என காஞ்சிபுரம் ஹாக்கி அமைப்பு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !