மேலும் செய்திகள்
மாநில சதுரங்க போட்டி; வீரர், வீராங்கனையர் தேர்வு
04-Mar-2025
சென்னை, மார்ச் 21--சென்னை மாவட்ட சைக்கிள் போலோ சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை மறுநாள், விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் காலை 8:00 மணிக்கு துவங்கும். இதில், 13, 15, 17, 19 வயது, அதற்கு மேற்பட்ட சீனியர் ஆகிய பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள சென்னையை சேர்ந்த வீரர், வீராங்கனையர், போட்டி நேரத்தில் நேரடியாக பங்கேற்கலாம் என, சென்னை மாவட்ட சைக்கிள் போலோ சங்கம் தெரிவித்துள்ளது.
04-Mar-2025