உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில சதுரங்க போட்டி தருண், தனிஷ் அபாரம்

மாநில சதுரங்க போட்டி தருண், தனிஷ் அபாரம்

சென்னை, முகப்பேரில் நடந்த சிறுவர்களுக்கான மாநில சதுரங்க போட்டி, 20 வயதுக்கு உட்பட பிரிவில், தருண் மற்றும் தனிஷ் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றனர்.'ஏ மேக்ஸ்' அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான ஏழாவது மாநில செஸ் போட்டி, முகப்பேர், மேற்கு நொளம்பூரில் உள்ள டெக்லத்தான் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 8, 10, 12, 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட பிரிவுகளில் தனித்தனியாக இருபாலருக்கும் நடத்தப்பட்டன. போட்டிகள், 'சுவிஸ்' அடிப்படையில், 'பிடே' விதிப்படி நடந்தது.இதில், 20 வயது உட்பட்ட பிரிவில், ஆண்களில் சென்னையை சேர்ந்த தருண் முதலிடத்தையும், திருவள்ளூர் தனிஷ் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.அதேபிரிவில் பெண்களில், திருவள்ளூரை சேர்ந்த பிரதீக் ஷா முதலிடத்தை பிடித்தனர். இதில், 8 வயது பிரிவில், சென்னையை சேர்ந்த லேகாஸ்ரீ மற்றும் அர்ஜூன் ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர். அதேபோல், 10 வயது பிரவில் திருவள்ளூரை சேர்ந்த ஹரனி மற்றும் சம்ருத்; 12 வயது பிரிவில், திருவள்ளூரை சேரந்த வைஷ்ணவி ஆனந்த் மற்றும் கவின் கமேஷ் ஆகியோர் முதலிடங்களை வென்றனர். தொடர்ந்து, 15 வயது பிரிவில் திருவள்ளூரை சேர்ந்த ஜனனி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முதலிடங்களை தட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை