உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு தென்மண்டல பல்கலைகளுக்கான பேட்மின்டனில் தமிழகம் அபாரம்

விளையாட்டு தென்மண்டல பல்கலைகளுக்கான பேட்மின்டனில் தமிழகம் அபாரம்

சென்னை:தென்மண்டல அளவில் பல்கலை அணிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டியில், தமிழக பல்கலை அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தென்மண்டல அளவில் பல்கலை அணிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள், பல்கலை மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கின.அகில இந்திய பல்கலை சங்கம் ஆதரவுடன் நடக்கும் இப்போட்டியில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 120 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.'நாக் அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியின் முதல் சுற்றில், தமிழகத்தைச் சேர்ந்த வேல் டெக் பல்கலை அணி, 3 - -2 என்ற ஆட்டக் கணக்கில், தெலுங்கானாவின் பாலமுரு பல்கலை அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.அதுபோல், தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கலசலிங்கம், பாரதியார், ராமச்சந்திரா, ஹிந்துஸ்தான், மனோன்மணியம், அம்பேத்கர், அமீட், அண்ணா, சென்னை மற்றும் ஜேப்பியார் ஆகிய பல்கலை அணிகள், முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.போட்டிகள் நாளை வரை நடக்கின்றன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அடுத்த மாதம் ராஜஸ்தானில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ