உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு

சென்னை: மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவேரி மருத்துவ குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: இலங்கையை சேர்ந்த 60 வயதான பெண், தொடர்ச்சியான தலைவலி, மங்கலான பார்வையாலும் அவதிப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் 2.8 செ.மீ., அளவில் ரத்த நாள வீக்கம் இருப்பது, பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அந்த வீக்கம், பலுான் போல் வீங்கி, வெடிக்கும் ஆபத்தான தன்மையுடன் இருந்தது. அப்பெண்ணுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதன் காரணமாக, 'என்டோவாஸ்குலர் ப்ளோ டைவர்ஷன் வித் காயிலிங்' என்ற நவீன சிகிச்சை வாயிலாக, குறைந்தபட்ச ஊடுருவல் வாயிலாக, சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அப்பெண் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை