உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எஸ்.ஆர்.எம்., -  ஜெயின் பல்கலை தேசிய நீச்சலில் முதலிடம்

 எஸ்.ஆர்.எம்., -  ஜெயின் பல்கலை தேசிய நீச்சலில் முதலிடம்

சென்னை: அகில இந்திய பல்கலை களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில், ஆண்களில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையும், பெண்களில் பெங்களூரு ஜெயின் பல் கலையும், முதலிடங்களை கைப்பற்றி சாம்பியன் கோப்பைகளை வென்றன. இந்திய பல்கலை கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியை நடத்தின. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் கடந்த 18ல் போட்டி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து 160 பல்கலைகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் 'ப்ரீஸ்டைல்' பிரிவில், கிறிஸ்ட் பல்கலையைச் சேர்ந்த அனீஸ் கவுடா முதலிடத்தையும், பெங்களூரு ஜெயின் பல்கலையின் ஆகாஷ் மணி இரண்டாம் இடத்தையும், புனித அலோசிஸ் பல்கலையின் அலுஸ்டர் சாமுவேல் ரேகோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அனைத்து போட்டிகள் முடிவில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக, 115 புள்ளிகளை பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதல் இடத்தையும், 107.50 புள்ளிகளை பெற்ற பெங்களூரு ஜெயின் பல்கலை இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின. அதேபோல், பெண்களில் 160 புள்ளிகளில் பெங்களூரு ஜெயின் பல்கலை முதலிடத்தையும், 110 புள்ளிகள் பெற்று சண்டிகர் பல்கலை இரண்டாம் இடத்தையும் வென்று அசத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை