உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் இந்திய கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., அணி தங்கம்

தென் இந்திய கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., அணி தங்கம்

சென்னை,தென் இந்திய அளவில் நடந்த கபடி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆண்கள் அணி 30 - 26 என்ற புள்ளியில், தமிழக காவல் துறை அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.தமிழ்நாடு கபடி சங்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட கபடி சங்கம் இணைந்து, தென் இந்திய அளவில் ஆண்களுக்கான கபடி போட்டியை, திருவாரூர் மாவட்டத்தின் வடுவூர் மேல்பதியில் கடந்த 6ம் தேதி நடத்தின. இதில், 16 சிறந்த கபடி அணிகள் பங்கேற்றன.இதன் அரையிறுதி போட்டியில், வேல்ஸ் பல்கலை அணியை 29 - 39 என்ற புள்ளியில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி இறுதி போட்டியில் தமிழக காவல் துறை அணியை எதிர்த்து, விளையாடியது.அசத்தலாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., அணி 30 - 26 என்ற புள்ளியில், எதிர்த்து விளையாடிய தமிழக காவல் துறை அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ