உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

சென்னை; துாத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 'பின்ஸ்விம்மிங்' எனும் நீருக்கடியில் விளையாடும் போட்டிகள், துாத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில்லே விளையாட்டு அகாடமியில் நேற்று முன்தினம் நடந்தன. மாநில அளவிலான இப்போட்டியை, தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு போட்டிகள் சங்கம், துாத்துக்குடி நீருக்கடியில் விளையாட்டு போட்டிகள் சங்கம் இணைந்து நடத்தின. இதில் 30 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் முடிவில், அதிக வெற்றிகளை பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. போட்டி பிரிவு வெற்றியாளர்கள் வென்ற பதக்கம் பெண்கள் ஒற்றையர், 50 மீ., பிபின், 50, 100, 200 மீ., சர்பேஸ், 4x100 கலப்பு ரிலே பவித்ராஸ்ரீ ஐந்து தங்கம் தனி நபர், 50 மீ., அப்னியா, 50 மீ., சர்பேஸ், 100, 200 மீட்டர் பிபின், 4x100 கலப்பு ரிலே அர்ச்சனா ஐந்து தங்கம் ஆண்கள் ஒற்றையர், 50, 100, மற்றும் 200 மீ., பிபின் சபரிகிரிசன் மூன்று தங்கம் தனி நபர், 50, 100 மீட்டர் பிபின், 50 மீ., அப்னியா, 50 மீ., சர்பேஸ் குருலால் 3 தங்கம், 2 வெள்ளி தனி நபர், 50 மீ., அப்னியா, 50, 100 மீ., சர்பேஸ் கே.சரண் 3 தங்கம் தனி நபர், 200 மீ., பிபின், 4x100 பிபின் ரிலே, கலப்பு ரிலே, 50 மீ., பிபின், 50 மீ., அப்னியா ஜெயசூர்யா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ