உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறுவட்ட அளவில் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் அணி முதலிடம்

குறுவட்ட அளவில் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் அணி முதலிடம்

சென்னை, குறுவட்ட அளவிலான வாலிபாலில் மூன்று பிரிவிலும், கால்பந்தில் ஒரு பிரிவிலும், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தை பிடித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை வருவாய் மாவட்ட அளவில், வடக்கு மற்றும் தெற்கு என, இரு வட்டங்களாக பிரித்து, 23 குறுவட்டங்கள் அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, தென்சென்னை, ராயப்பேட்டை மண்டலம் சார்பில், வாலிபால் மற்றும் கால்பந்து போட்டிகள், திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தன. அதில், வாலிபால் மற்றும் கால்பந்தில், 14, 17, 19 வயதுடைய மூன்று பிரிவுகளில் தலா, 10 அணிகள் எதிர்கொண்டன. அனைத்து போட்டிகள் முடிவில், 19 வயது பிரிவில் மயிலாப்பூர், செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தையும், ராயப்பேட்டை இமாக்குலேட் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அதேபோல், 17, 14 வயது பிரிவுகளிலும், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியது. கால்பந்து, 14 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 7 - 6 என்ற கோல் கணக்கில், ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ