உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குத்துச்சண்டை போட்டியில் எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்

குத்துச்சண்டை போட்டியில் எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்

சென்னை:தமிழ்நாடு குத்துச்சண்டை சார்பில், மாநில ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, கோபாலபுரம் எஸ்.டி.ஏ.டி., குத்துச்சண்டை மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாநிலத்தின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளின் குத்துச்சண்டை வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.பல்வேறு எடைகளில் 18 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் போட்டியிட்ட எஸ்.டி.ஏ.டி., அணியின் வீரர், வீராங்கனையர் எட்டு தங்கம், மூன்று வெள்ளி பதக்கம் வென்று, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.மாணவர் பிரிவில் மூர்த்தி, உதயா, ரஸ்வந்த், சையத் ஹுசைன், ரிசி ஆகியோர் தங்கம்; அஜய், ஆகாஸ், ஹபீஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை கைபற்றினர். மாணவி பிரிவில் பாற்கவி, நந்தினி, ஸ்ரீநிதி ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். தவிர, போட்டியில் அதிக புள்ளி பெற்று, எஸ்.டி.ஏ.டி., அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை