வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
கோடம்பாக்கம், சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு- மேற்கு பகுதி தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழா, தி.மு.க., அரசின் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 5,072 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என, முப்பெரும் விழா கோடம்பாக்கம், காமராஜர் காலனி, ரங்கராஜபுரம் பிரதான சாலை நேற்று நடந்தது.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.அவர் பேசுகையில், ''மேயராகவும் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் சென்னை மாநகரத்தை கட்டமைத்தவர் முதல்வர் ஸ்டாலின். மத்திய அரசின் தொகுதி வரைமுறையை எதிர்த்து, நாட்டிலே முதல் முதல்வராக குரல் கொடுத்து, பிற மாநில முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். முதல்வர் அறிமுகம் செய்த மகளிர் உரிமை தொகுதி திட்டத்தை, பா.ஜ., நான்கு மாநிலங்களில் காப்பியடித்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது,'' என்றார்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''கடந்த மழைக்காலத்தில் கோடம்பாக்கம் பகுதி எப்படி இருக்கும் என, உங்களுக்கு தெரியும். புது வடிகால்கள் அமைக்கப்பட்டு, அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் இருமுறை இந்த பகுதியில் ஆய்வு செய்தனர். எல்லாருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அடித்தட்டு மக்களுக்கான பட்ஜெட்,'' என்றார்.நிகழ்ச்சியில், தி.நகர் மேற்கு பகுதி கழக செயலர் ஏழுமலை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வும், சென்னை தென்மேற்கு மாவட்டம் செயலருமான வேலு, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மகளிர் தொண்டர் அணி சென்னை தென்மேற்கு மாவட்ட அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, சென்னை தென்மேற்கு மாவட்டம் தி.நகர் பகுதி மாவட்ட பிரதிநிதி ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்