முதல் டிவிஷன் கால்பந்து ஸ்டாலின் அணி வெற்றி
சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, அயனாவரம் ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், தளபதி ஸ்டாலின் அணி, சென்னை போஸ்டல் அணியை எதிர்த்து களம் இறங்கியது.தளபதி ஸ்டாலின் அணி சார்பில், அந்த அணியின் வீரர் இளங்கோ 15வது நிமிடம், மணி 16, 52வது நிமிடம், திலீபன் 61வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். சென்னை போஸ்டல் அணி சார்பில், பவழவாணன் ஒரு கோல் அடித்தார்.முடிவில் தளபதி ஸ்டாலின் அணி 4 - 1 கோல் கணக்கில் சென்னை போஸ்டல் அணியை தோற்கடித்தது. சீனியர் டிவிஷன்
அதேபோல், சென்னை கால்பந்து அமைப்பு சார்பில் சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டியும், அயனாவரத்தில் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்ட்ரல் எக்சைஸ், சென்னை சிட்டி போலீஸ் அணிகள் மோதின.விறுவிறுப்பான ஆட்டத்தின் 39வது நிமிடத்தில், தமிழ்நாடு போலீஸ் அணி வீரர் கணேஷ்மூர்த்தி, போட்டியின் முதல் கோல் அடித்தார்.இதற்கு பதிலடி தரும் வகையில் 42வது நிமிடத்தில், சென்டரல் எக்சைஸ் அணியின் ஜெயசூரியா, அணிக்காக ஒரு முதல் கோல் அடித்தார். அதே அணியின் உமா சங்கர், 73வது நிமிடத்தில் ஒரு கோல் சேர்த்தார். முடிவில், 2 - 1 என்ற கோல் கணக்கில், சென்டரல் எக்சைஸ் அணி வெற்றி பெற்றது.