| ADDED : டிச 10, 2025 05:55 AM
சென்னை: திருச்சியில் நடந்த மாநில பேட்மின்டன் போட்டியில், சென்னை பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கான மாநில பேட்மின்டன் போட்டி, திருச்சி மாவட்டத்தின் தொட்டியத்தில் நடந்தது. இதில், தமிழகத்தின் 38 மாவட்ட மற்றும் இரண்டு விளையாட்டு விடுதி அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் - அவுட் முறையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தன. இதில், சென்னை சிந்தி மாடல் பள்ளி மாணவர் திபீஷ், தர்மபுரி டான் பாஸ்கோ பள்ளி மாணவரான லட்சுமணனை எதிர்த்து மோதினார். போட்டியின் துவக்க செட்டில் அசத்தலாக விளையாடிய லட்சுமணன் 21 - 9 என கைப்பற்றினார். எளிதாக அவர் வெற்றி பெற்று வி டுவார் என நினைத்திருந்த நிலையில், இரண்டாவது செட்டை 21 - 15 என்ற கணக்கில் திபீஷ் கைப்பற்றினார். இதனால், வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த செட்டையும் 21 - 14 என கைப்பற்றிய திபீஷ், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.