உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில டென்னிஸ் தொடர் சென்னை ஜோடி சாம்பியன்

மாநில டென்னிஸ் தொடர் சென்னை ஜோடி சாம்பியன்

சென்னை, சென்னையில் நடந்த மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், சென்னையின் லட்சுமி பிரியா, லாவண்யா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான மாநில டென்னிஸ் தொடர் நடந்தது. லீக் முறையில் போட்டிகள் நடந்தன. மகளிருக்கான இரட்டையர் சுற்றில், சென்னையின் லட்சுமி பிரியா, லாவண்யா ஜோடி, அனைத்து போட்டிகளிலும் வென்று, 6 புள்ளிகளுடன் அந்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மிருதுளா - விதுலா ஜோடி 2 வெற்றி, 1 தோல்வி என, 4 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தின் மிருதுளா - தியாதர்ஷினி ஜோடி வெண்கல பதக்கமும் பெற்றனர். ஆடவருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓஜஸ் தேஜோ - அனிஷ் ஜோடி 6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றனர். கோவை மாவட்டத்தின் தருண் விக்ரம் - அகிலேஷ் ஜோடி, 4 புள்ளிகளுடன் வெள்ளியும், கோவை மாவட்டத்தின் கவின் கார்த்திக் - ரக் ஷித் தருண் ஜோடி வெண்கல பதக்கமும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை