காதலிக்க வற்புறுத்தி பெண் மீது கல்வீச்சு
வளசரவாக்கம்:மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது பெண், வளசரவாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பெண், கல்லுாரியில் படிக்கும்போது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், 25, என்பவரை காதலித்து வந்துள்ளார்.ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால், சில மாதங்களுக்கு முன், அப்பெண் அவரை விட்டு விலகியதாக தெரிகிறது. இருப்பினும், ஸ்ரீராம் அந்த பெண்ணை, தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற ஸ்ரீராம், தன்னை காதலிக்க வற்புறுத்தி கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.புகாரின்படி, வளசரவாக்கம் போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ஸ்ரீராமை கைது செய்து விசாரிக்கின்றனர்.