உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்

வீட்டில் இருந்து கடைக்கு சென்ற 9 வயது சிறுவனை, தெருநாய்கள் கடித்து குதறின. பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போரூர், மேட்டுகுப்பம், ஓம்சக்தி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் சபாநாயகம், 38; இவர், போரூர் டோல்கேட் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வடிவுகரசி. இவர்களது மகன் லக் ஷன், 9; ஆலப்பாக்கம் தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். காலை 11:00 மணியளவில் கடைக்கு செல்ல வெளியில் வந்தான். அப்போது, தெருவில் சுற்றித்தரிந்த தெருநாய்கள், லக் ஷனை விரட்டி, துரத்தி கடித்து குதறின. இதில், சிறுவனின் இடது தோள்பட்டை மற்றும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !