உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்

டி.பி.,சத்திரம், நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபரை, தெருநாய்கள் விரட்டி கடித்து குதறிய சம்பவம், அப்பகுதியில் பீதியை கிளப்பியுள்ளது. அண்ணா நகர் 'ஓ' பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் இப்ரான், 24; தனியார் பள்ளி ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, டி.பி.,சத்திரம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, வி.ஓ.சி., நகர் பகுதியில், செல்வம் என்பவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தார். இப்ரானின் வாகன சத்தத்தை கேட்டு, கூடி இருந்த தெருநாய்கள், அவரை விரட்டி சென்று கடித்தன. காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை