உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அவுட்

எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அவுட்

எண்ணுார்:எர்ணாவூர் மேம்பாலம் - பாரதியார் நகர் சந்திப்பு வரையிலான சாலையில், தெருவிளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக இருப்பதால், விபத்து அச்சம் நிலவுகிறது. எண்ணுார் அடுத்த, எர்ணாவூர் மேம்பாலம் முதல் பாரதியார் நகர் சந்திப்பு வரையிலான, 300 மீட்டர் துார சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை துறைமுகம் நோக்கி செல்லக் கூடிய, கன்டெய்னர், டிரைலர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு பிரதான சாலையாகும். எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பாரத் நகர் சந்திப்பிலும், மணலி விரைவு சாலையில் இருந்து, எண்ணுார் விரைவு சாலைக்கு திரும்பும், பாரதியார் நகர் சந்திப்பிலும், கனரக வாகனங்கள் கட்டுப்பாடுன்றி தறிகெட்டு வருகின்றன. அது போன்ற நேரங்களில் சாலையை கடக்க முற்படும், பாதசாரிகள், டூ - வீலர், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், தெருவிளக்குகளும் எரியாமல் இருப்பதால், விபத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போல் உள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட, மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகளை சரி செய்து, ஒளிர செய்யவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !