மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
அரும்பாக்கம், பெண்களுக்கான 'பிங்க்' பைக்கில் ஏறிய கல்லுாரி மாணவர், ஓட்டுநர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், போலீசார் கைது செய்தனர். ஓட்டேரியை சேர்ந்த 31 வயது பெண், 'ராபிடோ' மொபைல் போன் செயலி வாயிலாக, தனது இருசக்கர வாகனத்தை, பெண்களுக்காக மட்டும் இயங்கும், 'பிங்க்' பிரிவில் இணைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கோயம்பேடு - அரும்பாக்கம் செல்வதற்காக, 'புக்கிங்' ஒன்று வந்துள்ளது. அப்பெண், வழக்கம் போல் புக்கிங்கை ஏற்று, வாடிக்கையாளரை அழைத்து பேசியபோது, எதிர்முனையில் ஆண் நபர் பேசியுள்ளார். அவர், தன் தாயை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். பின், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது, அங்கு நின்ற வாலிபர், தாய் வேறு வாகனத்தில் சென்று விட்டதாகவும், தன்னை கல்லுாரியில் இறக்கிவிடுமாறும் கேட்டுள்ளார். மாணவன் மீது பரிதாபப்பட்ட அப்பெண் ஓட்டுநர், வாலிபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., வழியாக சென்றுள்ளார். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், மொபைல் போனில் ஆபாசமாக பேசியபடி, பெண் ஓட்டுநரிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, சத்தம் போட்டு வாலிபரை திட்டி, அவரது மொபைல் போனை பறித்துள்ளார். பின், அதே பகுதியில் உள்ள அரும்பாக்கம் போலீசில், வாலிபரை ஒப்படைத்தார். விசாரணையில் அவர், அமைந்தகரையை சேர்ந்த இம்ரான், 19, என்பதும், ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.
09-Sep-2025