மேலும் செய்திகள்
பைக்கில் சென்ற மாணவி லாரி மோதி உயிரிழப்பு
22-Sep-2025
திருமங்கலம், மொபைல் போனில் பேசி கொண்டிருந்த கல்லுாரி மாணவர், மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சென் னை, மேற்கு முகப்பேர், ஐந்தாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை பாடி குப்பத்தில் உள்ள தன் நண்பர் தனுஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன், வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, முகுந்தன் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில், மொட்டை மாடி அருகில் இருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிய துவங்கியது. அதே சமயம் முகுந்தனின் மொபைல் போன் வெடித்து, சம்பவ இடத்திலேயே முகுந்தன் இறந்தார். திருமங்க லம் போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
22-Sep-2025