உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் மாணவி பலி ரூ.30 லட்சம் இழப்பீடு

விபத்தில் மாணவி பலி ரூ.30 லட்சம் இழப்பீடு

சென்னை, சென்னை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மகள் சரண்யா 23; இன்ஜினியரிங் படித்து வந்தார்.கடந்த, 2018ல் குன்றத்துார் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் சரண்யா உயிரிழந்தார்.இதைத்தொடர்ந்து, சரண்யாவின் தாயார் சரளா, சகோதரி ஆகியோர், 71.50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி, 'சரக்கு வேன் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி சென்றதால் விபத்து நடத்துள்ளது தெரிகிறது. எனவே, சரண்யாவின் தாய் மற்றும் சகோதரிக்கு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், 30.94 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி