மேலும் செய்திகள்
ராஜிவ்காந்தி கல்லுாரியில் பொங்கல் விழா
14-Jan-2025
கீழ்ப்பாக்கம், சென்னை பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி, அக்கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் செயல்பாடுகளில் தலையிடும், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும், கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 23ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய மாணவர்கள், கல்லுாரியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் விதமாக, கல்லுாரியின் பிரதான நுழைவாயிலில், மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் சாலையில் அமர முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:கல்லுாரியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அமைதியான முறையில் போராடிய மாணவர்களை கல்லுாரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்துள்ளது. போராடும் மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் மிரட்டுகிறது. வசதிகள் செய்து தரக்கோரிய மாணவரின் கையை, முதல்வர் அலுவலக ஊழியர்கள் உடைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Jan-2025