பச்சையப்பன் கல்லுாரியை அரசே நடத்த மாணவர்கள் போராட்டம்
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நேற்று காலை கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரதான நுழைவாயிலில் நின்ற மாணவர்கள், ஹாரிங்டன் சாலையில் உள்ள மற்றொரு நுழைவாயில் வழியாக உள்ளே சென்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மாணவர்களின் செயல்பாடுகளில் தலையிடும், அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, கோஷங்களை எழுப்பினர்.பச்சையப்பன் சிலை மற்றும் நிர்வாக அலுவலகம் முன் அமர்ந்து, சில மணிநேரம் கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:மாணவர்கள் நடத்தும் பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை முடக்கக் கூடாது.துணைவேந்தர் அளவிலான கல்வியாளர்கள் குழுவை நியமிக்க வேண்டும். கல்லுாரி மேம்பாட்டு குழுவை, ஆறு கல்லுாரிகளிலும் அமைக்க வேண்டும்.நிலுவையில் உள்ள அறக்கட்டளை தேர்தலை உடனே நடத்த வேண்டும். மாணவர்கள் நலன் கருதி, பச்சையப்பன் கல்லுாரிகளை, அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.