மேலும் செய்திகள்
ஜாமின் கோரிய மாணவர்கள் பெற்றோர் ஆஜராக உத்தரவு
07-Nov-2024
சென்னை, சென்னை மாநிலக்கல்லுாரியில் படித்த திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்., 4ல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலரால், வெட்டிக் கொல்லப்பட்டார்.கொலை வழக்கில் கைதான சந்துரு, ஈஸ்வர், ஈஸ்வரன், யுவராஜ் ஆகிய நான்கு பேரும் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த குற்றச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நான்கு மாணவர்களுக்கும் சென்னை ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில், விபத்து அவசர சிகிச்சை பிரிவில், தலா இரண்டு பேர், 15 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும் என. நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் மேல் இருக்கும் ரத்தத்தை துடைப்பது, விபத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில், ஆம்புலன்ஸ்களில் வருவோரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்வது போன்ற பணிகளை, மாணவர்கள் செய்து வருகின்றனர்.'இந்த தண்டனையால், அவசர சிகிச்சை பிரிவுக்கு ரத்த வெள்ளத்தில் வருபவர்களை பார்க்கும் மாணவர்களுக்கு, மற்றவர்களை கத்தியால் வெட்டுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் வராமல் இருக்கும். மற்றவர்களின் வலியும், கஷ்டங்களும் புரியும்' என, டாக்டர்கள் கூறினர்.
07-Nov-2024