உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு

பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 35; விவசாயி.இவரது மனைவி, நிறைமாத கர்ப்பிணியான சத்யாவுக்கு, 31, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால், மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.நிலைய மருத்துவர் லத்திகா மற்றும் செவிலியர்கள் இருவர் இணைந்து, பிரசவம் பார்த்தனர். அதிகாலை 12:00 மணிக்கு, சத்யாவிற்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.மேலும், சத்யாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்யா ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.தாய் --- சேய் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள், சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் வந்து சமரசப்படுத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்தனர்.உத்திரமேரூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் உமாதேவி கூறுகையில், ''சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது.''எனினும், தாய் - சேய் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இறப்புக்கான மருத்துவ ரீதியான காரணங்கள் ஆராயப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்