உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமானத்தில் திடீர் கோளாறு சிங்கப்பூர் பயணியர் சிரமம்

விமானத்தில் திடீர் கோளாறு சிங்கப்பூர் பயணியர் சிரமம்

சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று அதிகாலை 2:50 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. இதில் 245 பேர் அமர்ந்திருந்தனர்.விமானம், ஓடுபாதையில் ஓடத்துவங்கியது. அப்போது, விமானியின் கேபின் பகுதியில், விமானத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. இதையடுத்து அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.தகவலறிந்து, விமான பொறியாளர்கள் குழு விரைந்தனர். பயணியர், 'லாஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.இழுவை வண்டியில் விமானம் இழுத்துச் செல்லப்பட்டு, கோளாறு சரிபார்ககும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.விமானம் தாமதமாக புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்தது. ஆனால், காலை 8:00 மணி ஆகியும் விமானம் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணியர் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.பின், அவர்களை சமானதானப்படுத்தி விமானத்தை ரத்து செய்வதாகவும், இன்று அதிகாலை செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில விமானங்கள், தொடர்ந்து இயந்திரக் கோளாறு ஏற்படுவது, காரணமின்றி புக்கிங் செய்த பின் ரத்து செய்வது விமான பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

10 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து புவனேஷ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், கோல்கட்டா, பக்தோரா ஆகிய பகுதிகளுக்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 10 விமானங்களின் சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டது.இதனால், வருகை, புறப்பாடு பயணியர் மிகவும் அவதியடைந்தனர். அந்தந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களுக்காகவே, இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை