உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில் திடீர் பள்ளம்

அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில் திடீர் பள்ளம்

அம்பத்துார், அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆசியாவில் மிகப் பெரிய தொழில்பேட்டையாக விளங்கும், அம்பத்துார் தொழிற்பேட்டையில், 2,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள, தெற்கு நிழற்சாலையில், நேற்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. சிட்கோ நிர்வாகத்தினர் அங்கு ஆய்வு செய்தனர். சாலை 10 அடி அகலத்திற்கு பலவீனமாக இருப்பதை கண்டறிந்தனர். சாலையை தோண்டி, பள்ளத்தில் மணல் கலவையை கொட்டி, சீரமைத்தனர். அதன்பின், அங்கு போக்குவரத்து சீரானது. அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பிரதான சாலையில், இரண்டு வாரங்களில், இரண்டு முறை மண் அரிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி