உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகரின் பாரம்பரியம், நிகழ்வு அறிய சூப்பர் சென்னை இணையதளம்

நகரின் பாரம்பரியம், நிகழ்வு அறிய சூப்பர் சென்னை இணையதளம்

சென்னை, நாட்டில் முதல் முறையாக, மக்களுக்கான இணையதளமாக 'சூப்பர் சென்னை' என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், சென்னையில் நடக்கும் நிகழ்வுகள், மக்களின் உணர்வுகள், பாரம்பரிய கதைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு, 'கிரெடாய்' அமைப்பும் முழு ஆதரவு அளித்துள்ளது. நடப்பாண்டின் துவக்கத்தில் நடந்த 'பேர்ப்ரோ' விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 'சூப்பர் சென்னை' இயக்கத்தின் லோகோவை வெளியிட்டார். அடுத்தகட்டமாக இதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில், சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் ரஜீத் ராத்தோட் பேசியதாவது: சூப்பர் சென்னை என்பது, வெறும் இணையதளம் மட்டுமல்ல. சென்னை நகரின் பாரம்பரியம், கலாசாரம், தினசரி நிகழ்வுகள், முன்னேற்றங்கள் போன்றவற்றை முக்கியத்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சென்னை நகருக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு மரியாதை. நம் ஊர் பெருமையை அறிய முடியும். நவீன தொழில்நுட்பம், மக்களுக்கு தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பகிரும் வசதியை, இந்த இணையதளம் தருகிறது. மாதந்தோறும் 'ஐகான் ஆப் தி மந்த்' விருதும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், 'நேச்சுரல்ஸ் சலுான்' இணை நிறுவனர் குமரவேலுக்கு, 'ஐகான் ஆப் தி மந்த்' விருது வழங்கப்பட்டது. 'கிரெடாய்' நிறுவன தலைவர் முகமது அலி, பாயிண்ட் காஸ்ட் நிறுவன துாதர் ஆதித்ய சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை