உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் மருத்துவர் கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

பெண் மருத்துவர் கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

நொளம்பூர்: அமைந்தகரை பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் பாபு, 54. இவர், நொளம்பூரில் வசித்து வந்த மல்லிகா, 65, என்கிற மருத்துவரிடம், ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். மல்லிகா, தனது வீட்டை விற்றுவிட்டு, லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிக்க திட்டமிட்டார். இதையறிந்த வெங்கடேஷ் பாபு, வீட்டை வாங்க, தனக்கு தெரிந்த நபர் இருப்பதாக மல்லிகாவிடம் கூறி, அவரை திண்டிவனம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மயிலம் அருகே மல்லிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகையை எடுத்து கொண்டு தப்பிச் சென்றார். மல்லிகாவின் மகள் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடேஷ் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்களில் ஜாமினில் வெளிவந்த வெங்கடேஷ் பாபு, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்த நிலையில், திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார், திருப்பூரில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் பாபுவை கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை