மேலும் செய்திகள்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
09-May-2025
சென்னை, வி.ஐ.டி., சென்னை மற்றும் சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து, இருவேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.இதன் வாயிலாக, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கூட்டு நடவடிக்கைகளால், நிலையான வளர்ச்சி மேம்படுத்தப்பட உள்ளன.இந்த ஒப்பந்தங்களில், வி.ஐ.டி.,யின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், தேசிய தொழில்நுட்பட ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சென்னை இயக்குனர் டாக்டர் உஷா நடேசன் மற்றும் ரியல் எஸ்டேட் டெலப்பர்கள் சங்க சென்னை தலைவர் முகமது அலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.நிகழ்வில், ஜி.வி.செல்வம் கூறுகையில், ''எதிர்காலத்துக்கு தேவையான நிபுணர்களை உருவாக்கும் வி.ஐ.டி.,யின் சென்னை பணிகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில், நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்த, இந்நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்,'' என்றார்.
09-May-2025