உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ் சைதை அணி வீரர் வெற்றி

டேபிள் டென்னிஸ் சைதை அணி வீரர் வெற்றி

சென்னை, சென்னை டேபிள் டென்னிஸ் கிளப்புகளுக்கு இடையில் நடந்த போட்டியில், சைதை கிளப் அணி வீரர் சச்சின் கோப்பையை வென்றார்.சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கமலநாபன் டேபிள் டென்னிஸ் கிளப்பில், சென்னை கிளப்புகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி நடந்தது.இதில், பல்வேறு கிளப் அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், சைதை கிளப் அணியைச் சேர்ந்த சைதை சச்சின் முதல் பரிசையும், கமலநாபன் சென்டர் வீரர் கார்த்திக் இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர். அதேபோல் மாணவர்களுக்கான போட்டியில், சைதன்யா பள்ளி மாணவர் வதுர்கார்த்திக் முதல் பரிசையும், செட்டிநாடு பள்ளி மாணவர் ஆதர்ஸ் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.மேலும், ஓபன் பிரிவில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் வாசு முதல் பரிசையும், கமலநாபன் சென்டரின் வீரர் ஆகாஷ் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.வெற்றியாளர்களுக்கு, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் பயிற்சியாளர், எத்திராஜன் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ