உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்

சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்

மறைமலை நகர், மறைமலை நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மகள் அதிதி சரண்யா, 21.தனியார் கல்லுாரியில் பயின்று வருகிறார்.கடந்த 19ம் தேதி, அதிதி சரண்யாவை மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சைபர் கிரைம் அதிகாரி பேசுவதாக கூறி, உங்கள் வங்கி கணக்கு வாயிலாக, நீங்கள் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறி, யு.பி.ஐ., எண்ணை கேட்டுள்ளார்.அதிதி சரண்யா, யு.பி.ஐ., எண்ணை கொடுத்த சிறிது நேரத்தில், அவரின் வங்கி கணக்கில் இருந்து, 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெற்றோரிடம் அதிதி சரண்யா தெரிவித்ததையடுத்து, அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை