உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிய மின் பகிர்மான வட்டமாகிறது தாம்பரம்

புதிய மின் பகிர்மான வட்டமாகிறது தாம்பரம்

சென்னை:தமிழக மின் பகிர்மான கழகத்தின், 46வது மின் பகிர்மான வட்டமாக, தாம்பரத்தை உருவாக்கும் பணிகளை மின் வாரியம் துவக்கியுள்ளது. தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது. இது, மாநிலம் முழுதும், 12 மண்டலங்களாகவும், 45 மின் பகிர்மான வட்டங்களாகவும் செயல்படுகிறது. மண்டலம், தலா ஒரு தலைமை பொறியாளர் மற்றும் பகிர்மான வட்டம், தலா ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செயல் படுகின்றன. தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், அதிக மின் இணைப்புகள் உள்ளன. எனவே, செங்கல்பட்டு மற்றும் அடையாறு மின் பகிர்மான வட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, தாம்பரம் புதிய மின் பகிர்மான வட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இதற்காக, அந்த இரு வட்டங்களிலும் உள்ள மின் இணைப்புகள், மின்மாற்றிகள், துணைமின் நிலையங்கள், பணியாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, மின் வாரியம் கணக் கெடுத்துள்ளது. அதற்கு ஏற்ப, விரைவில் தாம்பரம் புதிய வட்டமாக பிரிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை